மனைவி மரணம் - கணவன் அடித்துக் கொன்றதாகக் குற்றச்சாட்டு.. தலைமறைவாக உள்ள கணவனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் வலைவீச்சு

0 577

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மனைவி தனது பெற்றோருடன்பேசிய ஆத்திரத்தில் அவரை அடித்துக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்படும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சதீஷ்குமார் என்ற அந்த நபருக்கும் அவரது மனைவி மேகலாவின் பெற்றோருக்கும் 5  ஆண்டுகளுக்கு முன் வாய்த்தகராறு ஏற்பட்டு, இருதரப்பும் பேசிக் கொள்வதை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து ஊர் திருவிழாவுக்கு வந்த மேகலா தனது பெற்றோருடன் பேசியதால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் வீட்டுக்குச் சென்றதும் மனைவியுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று மேகலா தனது பெற்றோருக்கு போன் செய்து, கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் மேகலா இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் சென்றுள்ளது.

சதீஷ்குமாரும் அவரது குடும்பத்தாரும்தான் மேகலாவின் இறப்புக்குக் காரணம் எனக் கூறி அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments