7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது மக்களவை தேர்தல்.. சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச சட்டசபைகளுக்குப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன
543 இடங்களைக் கொண்ட மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது.
7 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 64 புள்ளி 41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக 5-ஆவது கட்டத்தில் 57 புள்ளி 47 சதவீத வாக்குகளும், அதிகபட்சமாக 4-ஆவது கட்டத்தில் 69 புள்ளி 16 சதவீத வாக்குகளும் பதிவான.
மக்களவைத் தேர்தலுடன் 175 இடங்களைக் கொண்ட ஆந்திரா, 147 இடங்களைக் கொண்ட ஒடிஸா, 60 இடங்களைக் கொண்ட அருணாச்சல பிரதேசம், 32 இடங்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும், ஆந்திரா, ஒடிஸா சட்டசபைக்கான வாக்குகளும் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச சட்டசபைகளுக்குப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
Comments