திருவள்ளூர் தனியார் பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

0 249

காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை தனியார் பெயின்ட் ஆலையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. தீ எரிந்து கொண்டிருந்த போது, ரசாயன பேரல் ஒன்று எகிறிப் போய் மேற்கூரை மீது விழுந்தது.

அதில் தகர மேற்கூரை சரிந்து பக்கத்து சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது விழுந்து, அவர் உயிரிழந்தார். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலை பணியாளர்கள் சுகந்தி, பார்த்தசாரதி ஆகிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், கருகிய ஆலைக்குள் இருந்து புஷ்கர் என்ற தொழிலாளரின் உடலும் இன்று கண்டெடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments