பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு... ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 பேர் உள்பட 11 பேர் மீது வழக்கு

0 346

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


விதிமுறைகளை மீறி, இறந்தவர்கள் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும்,ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் 70 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என லால்குடியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments