ராமநாதபுரத்தில் ஒரே சிரிஞ்சை பல முறை பயன்படுத்துவதாக நோயாளி குற்றச்சாட்டு

0 321

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இயங்கிவரும் சரோஜினி கிளினிக்கில், ஒரே சிரிஞ்சை பல முறை பயன்படுத்தப்படுவதாகக் கூறி நோயாளி ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெந்நீரில் கூட சிரிஞ்சை கழுவுவதில்லை என கண்ணன் என்ற மருத்துவரிடம் அவர் வாக்குவாதம் செய்வதுபோல் அந்த காணொளியில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ஒருவருக்கு போட்ட ஊசியை மற்றவருக்கு போடுவதில்லை எனவும், அத்துமீறி மருத்துவமனைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த அந்த நபர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments