வடமாநிலங்களில் வெப்ப தாக்குதலுக்கு 15 பேர் உயிரிழப்பு !

0 250

பீகார் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் நிலவிய வெப்ப அலையால் 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை வரை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெப்ப அலை நீடிக்கும் என்றும் 50 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தலைநகர் டெல்லியில் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், குரங்குகள் போன்றவையும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அடுத்த சில நாட்களில் வெப்பம் குறையக் கூடும் என்றும் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments