உடல்நலம் பாதித்து குட்டியுடன் தவித்திருந்த பெண் யானை

0 297

கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் படுத்திருந்த யானை கிரேன் மூலம் நிற்கவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குட்டியானை பரிதவிப்புடன் தாயைச் சுற்றிச் சுற்றி வருகிறது.

நேற்று யானைக்கு சுமார் 30 பாட்டில் திரவ மருந்துகள், மாத்திரைகளை வழங்கிய கால்நடை மருத்துவர்கள், 2வது நாளாக இன்றும் தொடர் சிகிச்சை அளித்தனர்.

எழ முடியாமல் தவித்த தாய் யானையை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி, அதன்மீது தண்ணீர் பாய்ச்சியதும் சோர்வு நீங்கி சற்றே புத்துணர்ச்சியடைந்தது.

யானை நிற்கவைக்கப்பட்டவுடன்குட்டியானை, தாய் யானையிடம் பால் அருந்தியது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments