சாலையில் காரின் டயர் வெடித்ததால் விபத்து ஏர் பேக் உதவியதாலும் 2 கார்களில் பயணித்தவர்கள் தப்பினர்...

0 375

திருவண்ணாமலையிலிருந்து செஞ்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் முன்பக்க வலது டயர் திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த கார் மற்றும் பைக் மீது வேகமாக மோதியது.

இதில், பைக்கில் வந்த வேல்முருகன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும், ஏர் பேக் உதவியதாலும் இரண்டு கார்களில் பயணித்தவர்கள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments