காட்டு யானைகள் முகாம் - பேரிஜம் ஏரிப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
அனுமதி பெற்று வந்த சுற்றுலாப் பயணிகளையும் அவர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும், அந்த இடத்தில் இருந்து யானைகள் இடம்பெயர்ந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.
Comments