ரூ.2.15 கோடிக்கு செல்போன்களை வாங்கி விட்டு பணம் தராததால் விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தமின் அன்சாரி என்பவர், துபாயில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அங்கு முபாரக் என்பவர் நடத்திவந்த செல்போன் கடையை கவனித்துவந்த அன்சாரிக்கு, யாசர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு செல்போன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து ஒரு மாதத்தில் பணத்தை தந்துவிடுவதாக யாசர் கூறியதை நம்பி, அன்சாரி தமது கடை உரிமையாளரிடம் சிபாரிசு செய்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொடுத்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
6 மாதங்களாகியும் யாசர் பணத்தை தராத நிலையில், கடை உரிமையாளர் கொடுத்த நெருக்கடியால் விரக்தி அடைந்த தமின் அன்சாரி, வாட்சப்பில் வீடியோ அனுப்பிவிட்டு தூக்கிட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தலைமறைவாக உள்ள யாசரை கைது செய்யுமாறு அன்சாரியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments