பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு.. கணக்கில் வராத ரூ. 1,80,000 கைப்பற்றப்பட்டதாக தகவல்..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்திய திடீர் ஆய்வின் போது, ஆவண காப்பக அறையிலிருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து சார் பதிவாளர் அருள் முருகன் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Comments