கெட்டுப்போன டோனட் சாப்பிட்ட 2 சிறுமிகளுக்கு உடல் நல பாதிப்பு... பேக்கரியில் போலீஸார் விசாரணை
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சி.கே.பேக்கரியில் வாங்கப்பட்ட டோனட்டை சாப்பிட்ட சிறுமிகள் 2 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதி சாப்பிட்டு மீதம் வைத்திருந்த டோனட்டை பார்த்த போது அதில் பூஞ்சை இருக்கவே இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், ராயப்பேட்டை போலீஸார் பேக்கரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கெட்டுப் போயிருந்த டோனட்டுகளை ஊழியர்கள் கீழே கொட்டியதாக கூறப்படுகிறது.
Comments