காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வைகாசி மாத விழா

0 1493

திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் வசந்த உற்சவத்தின் ஆறாம் நாள் விழாவில், தியாகராஜர் 9 முறை திரு நடனமாடிய வைபவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தியாகராஜரும், தனி சப்பரத்தில் வடிவுடையம்மனும் எழுந்தருளி உலா வந்தனர்.

வைகாசி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி காஞ்சிபுரம் குமரக்கோட்டம் பாலசுப்பிரமணி கோவிலில் வெள்ளித்தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள யாதவவல்லித் தாயார் உடனுறை யாதவ நாராயணப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்  நடைப்பெற்றது. பக்தர்கள் சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். 

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் உள்ள மணியாருடைய அய்யனார் கோவிலில் 7 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற களரி திருவிழாவில், 31 மண் குதிரைகளுக்கு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments