நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.9 லட்சத்திற்கான காசோலை, ரூ.62,000 ரொக்கம் பறிமுதல்

0 275

கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், 9 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ரியல் எஸ்டேட் தொழிலோடு சம்பந்தப்பட்ட இந்த துறையில் அதிகமாக ஊழல் நடைபெறுவதாக வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து இச்சோதனை நடைபெற்றது. பணம், காசோலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக உதவி இயக்குநர் ராகுல்ராஜ், இடைத்தரகர் முருகன் ஆகியோரிடம் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments