அனுமதியின்றி யூடியூப்பில் பெண்ணின் பேட்டி ஒளிபரப்பு: 3 பேர் கைது

0 534

சென்னையில் காதல் குறித்து இளம்பெண் தெரிவித்த கருத்துகளை அவரது அனுமதியின்றி ஒளிபரப்பு செய்ததாக யூடியூப் சேனல் உரிமையாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் பேட்டியெடுத்த பெண் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலுக்குச் சென்ற பெண்ணிடம், 'ஒளிபரப்பு செய்ய மாட்டோம் சும்மா ஜாலியாக சொல்லுங்கள்' எனக் கேட்டு 7 மாதத்திற்கு முன்பு வாங்கிய பேட்டியை அண்மையில் ஒளிபரப்பு செய்ததால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸில் புகாரளிக்கப்பட்டதால் அந்த பேட்டி நீக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments