சென்னையில் ஜப்பான் முகமை உதவியுடன் வெள்ளத் தடுப்பு செயல்படுத்த திட்டம்
பருவமழைக் காலங்களில் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை உதவியுடன் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நிலத்தடி சுரங்கங்கள், சைஃபோன் குழாய்கள், நீர்ப்படுகைகளை விரிவுபடுத்துதல், ஒரு நீர்நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலைக்கு நீரை அனுப்புதல் ஆகியவை பரிசீலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் சென்னை வரும் ஜப்பான் அரசு அதிகாரிகளோடு வெள்ளத்தடுப்பு திட்டங்கள் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதன்பின் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விரிவான வெள்ள தடுப்பு திட்ட அறிக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
முன்னதாக, வெள்ளத் தடுப்புக்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஜப்பானில் இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
Comments