இப்படி ஒரு டுவிஸ்ட்டா.. மன்மதன் டார்கெட்டில் விழுந்த 20 பெண்கள் ஊரில் பிளேஸ்கூலே.. நடத்துறாராம்பா..! காதலில் தோல்வி.. மேட்ரிமோனியலில் கிங்..!

0 1629

அமெரிக்க மாப்பிள்ளை எனக்கூறி, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 80 லட்சம் ரூபாய் பறித்த தென்காசியை சேர்ந்த ஐஐடி பொறியாளரை போலீசார் கைது செய்தனர். பணம் இல்லை என்று காதலை முறித்துச்சென்ற காதலியை பழிவாங்க பெண்களை குறிவைத்த ரியல் மன்மதன் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

சென்னை கொளத்தூரை சேர்ந்த கைம்பெண் ஒருவர் சென்னை மேற்கு மண்டல சைபர்கிரைம் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் மறுமணம் செய்து கொள்ள மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்த தன்னிடம், அமெரிக்க சாப்ட்வேர் என்ஜினீயர் என்று அறிமுகமான கார்த்திக் என்ற நபர் திருமணம் செய்வதாக பழகி, தன்னையும் தனது மகனையும் அமெரிக்கா அழைத்துச் செல்ல விசா எடுக்க வேண்டும் என்று கூறி 5 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகத் தெரிவித்திருந்தார்.

5 லட்சம் ரூபாய் செலுத்திய வங்கி கணக்கு முகவரியை வைத்து விசாரணையை முன்னெடுத்த போலீசார், விருகம்பாக்கத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அவரோ, தனது காதலர் பிரசாந்த் அமெரிக்காவில் டிபன்ஸ் துறையில் இருப்பதாகவும், அவருக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் தனது வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். தனக்கு வந்த 5 லட்சம் ரூபாயில் 3 லட்சம் ரூபாயை அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு தான் அனுப்பியதாக தெரிவித்தார் அந்த இளம்பெண்.

3 லட்சம் ரூபாய் பெற்ற வங்கி கணக்கு மற்றொரு இளம்பெண் உடையது என்பது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் விசாரித்த போது, இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்ய இருக்கும் அமெரிக்க மாப்பிள்ளை பிரசாந்த் ஆனந்த் என்பவர் தனக்கு அனுப்பி வைத்ததாகவும், அவரது அறிவுறுத்தலின்படி அந்த 3 லட்சம் ரூபாய் பணத்துடன் மேலும் 4 லட்சம் ரூபாய் சேர்த்து தான், மசாலா நிறுவனம் நடத்தும் ஹரிஹரன் என்பவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இவர்களில் எந்த பெண்ணும், அந்த அமெரிக்க மாப்பிள்ளையை நேரடியாகவோ, வீடியோ காலிலோ பார்க்கவில்லை என்பதால் மசாலா நிறுவனத்துக்காக பணம் வாங்கிச்சென்ற ஹரிகரனை பிடித்து விசாரித்தபோது அந்த பெண்களை ஏமாற்றி பணம் பறித்த அமெரிக்க மாப்பிள்ளையே அவர் தான் என்பதும், தென்காசியை சேர்ந்த அவரது உண்மையான பெயர் ஜார்ஜ் குமார் துரை என்பதையும் தெரியவந்தது.

சென்னையில் பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் BTech முடித்த அவர், IIT யில் MTech படித்து விட்டு, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் MS படித்திருப்பதும் தெரியவந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம்ஆண்டு வரை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் டேட்டா அனலிஸ்டாக பணிபுரிந்துள்ளார். தனது கல்லூரி காதலி இவரிடம் பணம் இல்லை என்பதற்காக காதலை முறித்துச்சென்றதால், அதற்கு பழிக்கு பழிவாங்கும் விதமாக பண ஆசையில் உள்ள பெண்களை குறிவைத்து அமெரிக்க மாப்பிள்ளை போல நடித்து கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் 80 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடியாக பறித்தது தெரியவந்துள்ளது.

பெண்களிடம் பறித்த பணத்தில் தென்காசியில் தனது வீட்டு அருகே Smart kids Fun School என்ற சிறுவர்களுக்கான 'கிட்ஸ்ஸ்கூல்' நடத்திவரும் ஜார்ஜ் குமார் துரை 'அம்மாவின் கைவண்ணம்' என்ற பெயரில் மசாலா நிறுவனம் நடத்தி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments