பிரபல ஓட்டலின் பீப் கறியை சாப்பிட்டு.. படாதபாடு பட்ட கன்னியாகுமரி அசைவப்பிரியர்..! இன்னுமாடா யூடியூப் ரிவியூவ்ஸ நம்புறீங்க..?

0 1130
பிரபல ஓட்டலின் பீப் கறியை சாப்பிட்டு.. படாதபாடு பட்ட கன்னியாகுமரி அசைவப்பிரியர்..! இன்னுமாடா யூடியூப் ரிவியூவ்ஸ நம்புறீங்க..?

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் யூடியூப்பர்களால் பிரபலப்படுத்தப்பட்ட பிஸ்மி ஓட்டலில் வாடிக்கையாளருக்கு கெட்டுபோன மாட்டிறைச்சி கரி பரிமாறப்பட்ட புகாரின் பேரில், அங்கு ஆய்வு நடத்திய உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர் கெட்டுபோன உணவுகளை குப்பையில் கொட்டி அழித்தனர்.

மாட்டிறைச்சி சும்மா... ஆட்டிறைச்சி மாதிரி வெந்துருக்கு.. என்று கன்னியாகுமரி பிஸ்மி ஓட்டல் பீப் கரியை பிரபலப்படுத்திய யூடியூப்பர்களில் இவரும் ஒருவர்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகிய மண்டபம் பகுதியில் பிஸ்மி என்ற அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு தனது நண்பருடன் சென்ற வெள்ளாங்கோடு ஊராட்சி கவுன்சிலர் வினோத் என்பவர் யூடியூப்பர்களால் புகழ்ந்து பேசப்பட்ட பரோட்டாவையும் பீப் கரியையும் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

பீப் கரியில் இருந்து துர் நாற்றம் வந்த நிலையில் , சாப்பிடாமல் பாதியில் வைத்து விட்டு உணவக உரிமையாளரிடம் பீப் கரி கெட்டு போயிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். உரிமையாளர் அதனை கண்டு கொள்ளாததால் தான் ஆர்டர் செய்த உணவுகளுக்கு பணம் செலுத்தி விட்டு ஓட்டலை விட்டு வெளியே நடந்து சென்றுள்ளார். வழியில் மூன்று முறை வாந்தி எடுத்ததால் , உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வினோத் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டதால் அவரது உத்தரவின் பேரில் அழகியமண்டபம் பிஸ்மி ஹோட்டலில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஓட்டலில் ப்ரீஷர் சமயலறை என பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் கெட்டு போன உணவுகளை குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர். உணவு மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்ததோடு ஹோட்டல் உரிமையாளர் முகமது பக்ரிதீனுக்கு நோட்டீஸ் வழங்கியும் நடவடிக்கை மேற்கொண்டனர்

பிஸ்மி ஹோட்டல் மீது தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் ஏற்கனவே 2-முறை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் 3-வது முறையாக ஆய்வு மேற்கொண்டுள்ளதால் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரி நாகராஜ், ஆய்வு முடிவு கிடைக்கப்பட்ட பின்னர் இந்த ஹோட்டலுக்கு சீல் வைப்பது குறித்து உயரதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments