ஆசிட் ஏற்றிச் சென்ற லாரியும் கேஸ் சிலிண்டர் லாரியும் மோதி விபத்து... சாலையில் ஆசிட் கொட்டி புகை கசிந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

0 318

ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே ஆசிட் ஏற்றிச் சென்ற லாரியும் கேஸ் சிலிண்டர் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. தேட்டகுண்டா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் டேங்கர் லாரியின் வால்வு திறந்து கொண்டு ஆசிட் சாலையில் கொட்டியது.

ஆசிட்டிலிருந்து நெடியுடன் கூடிய புகை எழுந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தகவல் கிடைத்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சாலையில் ஓடிய ஆசிட் மீது தண்ணீர் மற்றும் ரசாயன கலவையை பீய்ச்சி அடித்து புகை கசிவை கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments