இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபோது வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்க்... பலத்த காயத்துடன் உரிமையளார் மருத்துவமனையில் அனுமதி

0 411

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தானூரைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை பழைய பேருந்து நிலைய ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

வேலை முடிந்து திரும்பி வந்த அவர், பெட்ரோல் இல்லாததால், வாங்கி வந்து ஊற்றி வாகனத்தை குலுக்கி ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது, பயங்கர வெடிச் சத்தத்துடன் பெட்ரோல் டேங்க் வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால், அவரது வயிற்றில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாண்டில் கண்காணிப்புக் கேமரா இருந்திருந்தால், விபத்து எப்படி நேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments