அவன் கொலைக்காரன் தான் .. எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. புத்தகங்களுடன் ரவுடி உடல் அடக்கம்..! சவக்குழிக்குள் நின்று ஆதங்கப்பட்டவர்

0 1188

 நெல்லையில் வெட்டிக் கொல்லப்பட்ட தீபக்ராஜாவின் சடலத்துடன், சவப்பெட்டியில் புரட்சியாளர்களின் புத்தகங்களும் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. 

நெல்லை கே.டி.சி நகரில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி தீபக்ராஜாவின் கொலை தொடர்பாக நவீன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தீபக்ராஜாவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சடலம் நெல்லையில் இருந்து மூன்றடைப்பு, வாகைக்குளம் வரை 30 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இடையே இடையே ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி தீபக்ராஜாவின் சடலம் வாகைக்குளம் வந்து சேர்ந்தது. அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு பெண்கள் வீரவணக்கம் என்று கோஷமிட்டனர்

அதனை தொடர்ந்து தீபக்ராஜாவின் சடலத்தின் மீது தமிழரசன், சேகுவேரா, பிடல்காஸ்ட்ரோ உள்ளிட்ட புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது சவக்குழிக்குள் நின்றிருந்த தீபக்ராஜாவின் உறவினர், அங்கு கூடியிருந்த இளைஞர்களை பார்த்து , எல அவன் கொலைக்காரன் தான்.. ஆனால் அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. இனி நீங்கள் யாரும் குடிக்காதீங்கல.. என்று கேட்டுக் கொண்டார்

தொடர்ந்து அவரது சடலம் அங்கு அடக்கம் செய்யப்பட்டது. நெல்லையை பொருத்தவரை பல்வேறு இனக்குழுக்கள் இடையே நீண்டகாலமாக பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் நல்ல திறமையும் அனுபவமும் உள்ள போலீசாரை நுண்ணறிவு பிரிவில் பணியில் ஈடுபடுத்தி, வரும் காலங்களில் இது போன்ற கொடூர கொலை சம்வங்களை முன் கூட்டியே தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments