புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி.. 3,000 சோலார் விளக்குகளை பள்ளி மாணவ, மாணவிகள்
துபாயில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் 3,000 சோலார் விளக்குகளை தயாரித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மரமான வன்னி மரம் வடிவில் சோலார் விளக்குகளை அவர்கள் ஒளிரச் செய்தனர். இதன்மூலம் மிகப்பெரிய சோலார் விளக்கு கண்காட்சியை உருவாக்கியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில், மின்வசதி இல்லாத கிராமங்களுக்கு சோலார் விளக்குகளை வழங்க உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Comments