7 நாட்களுக்குப் பின் ரவுடி தீபக் ராஜா உடலை வாங்கிக்கொண்ட உறவினர்கள்.... 300 பைக்குகளில் ஆதரவாளர்கள் புடைசூழ இறுதி ஊர்வலம்

0 482

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜாவை கடந்த 20-ஆம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. 7 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவினர்கள்,

கொலை தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து உடலை பெற்றுக்கொண்டனர். 300 இருசக்கர வாகனங்களில் ஆதரவாளர்கள் சூழ உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பைக்கில் சென்றவர்களை பொன்னாக்குடி அருகே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

ஆம்புலன்ஸ் மூலம் வாகைக்குளம் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட உடல், சவப்பெட்டிக்குள் ஒரு சில புத்தகங்களையும் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments