நெய்வேலி காவல் நிலையம் அருகே இளைஞர் உயிரிழந்த கிடந்த விவகாரம்... உயிரிழப்புக்கு போலீசார் காரணம் என போராட்டம் நடத்திய உறவினர்கள்

0 324

நெய்வேலி காவல் நிலையம் அருகே காயங்களுடன் உயிரிழந்து கிடந்த இளைஞரின் மரணத்திற்கு போலீசார்தான் காரணம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில்,

உயிரிழப்புக்கு காரணமான கார் உரிமையாளரை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

சனிக்கிழமை அன்று கீழக்கொல்லையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுபோதையில் ஓட்டியதாக அவரது டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் மறுநாள் காலை வரும்படி கூறிய நிலையில், ஞாயிறு அன்று காவல் நிலையம் அருகே அவரது சடலம் கிடந்துள்ளது.

இதனையடுத்து நடந்த போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகவேகமாக சென்ற காரை பதிவு எண்ணை வைத்து காரை கண்டறிந்ததாகவும், காரின் அடிப்பகுதியில் ராஜ்குமாரின் தலைமுடி மற்றும் உடல் சிதறல்கள் இருந்ததையடுத்து ஹரிஹரன் என்பவரை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.gfx out

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments