பழுதடைந்த வலைகளை கடலில் விட்டுச் செல்லும் மீனவர்கள்.. தூக்கி வீசப்பட்ட வலைகளில் சிக்கி மடியும் கடல் வாழ் உயிரினங்கள்
குரோஷியா அருகே மீனவர்களால் கடலில் விட்டுச் செல்லப்பட்ட பழுதடைந்த மீன்பிடி வலைகளை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அப்புறப்படுத்தினர்.
சேதமடைந்த மீன்பிடி வலைகளை மீனவர்கள் கடலிலேயே வீசிவிடுவதால், அடுத்து பல ஆண்டுகளுக்கு அவை மக்காமல் இருந்து டால்பின்கள், ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் சிக்கி மடிந்து வருகின்றன.
அந்த வலைகளை மேலே சுமந்துவருவது கடினம் என்பதால், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அவற்றுடன் ஏர்-பலூன்களை இணைத்து அவை தானாக மேலே எழும்பிவந்ததும் சுலபமாக படகில் வைத்து கரைக்கு கொண்டு சென்றனர்.
Comments