கொல்கத்தாவில் புயலுக்குப் பின்பும் நீடித்த மழை... மீட்புப் பணிகளில் பல்வேறு துறையினர் தீவிரம்
கொல்கத்தாவில் பலத்த காற்று, மழைக்கு இடையே மாநகராட்சி, மின் வாரியத் துறை எனப் பலதுறைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 1 லட்சம் பேர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழந்து வடகிழக்கு நோக்கி நகரும் ரீமலால் அசாம், மேகலாயாவில் கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. அசாமின் 11 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை பெய்யத் தொடங்கிவிட்டதால் அசாமில் பேரிடர் மீட்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டனர்.
Comments