பெரிய முத்தம்மன் ஆலய வைகாசி பொங்கல் விழா - 1008 முளைப்பாரி ஊர்வலம் ,

0 1423

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி. நகர் பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதியில் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள தூய அமல அன்னை தேவாலய திருத்தேர் பவனியில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுத்தருளிய சுவாமி, அம்பாளை பக்தர்கள் தரிசித்தனர்.

மயிலாடுதுறை, திருவிழந்தூர் மேல முத்துமாரியம்மன் கோவிலில் 80-வது ஆண்டு தீமிதித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி கிராமத்தில் வர்ணமுத்து மாரியம்மன் ஆலயத்தில், அம்மனாகத் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேருக்கு 108 அபிஷேகங்களுக்குப் பிறகு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தில் உள்ள பெரிய முத்தம்மன் ஆலய வைகாசி பொங்கல் உற்சவ விழாவில் 1008 முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments