மூளைச்சாவு அடைந்த அரசுப் பேருந்து நடத்துநரின் உடல் உறுப்புகள் தானம்... அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

0 366

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சானார்பதி கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனபால், வீட்டின் மேற்கூரையைச் செய்யும் பணியில் ஈடுபட்டபோது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, மனைவியின் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. தனபால் உடலுக்கு கோட்டாட்சியர் தலைமையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.   கணவரின் உடல் வைக்கப்பட்ட ஃபிரீசர் பாக்ஸை தொட்டு கும்பிட்டு அவரது மனைவி கதறி அழுதார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments