இன்று நள்ளிரவில் மேற்கு வங்கம் அருகே கரை கடக்கும் ரீமல் புயல்..
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ரீமல் புயல் இன்று நள்ளிரவில் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்சமாக 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதனால் கொல்கத்தா, தெற்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் உள்ளிட்ட உதவிப்பொருட்களுடன் இரு கப்பல்கள், சீ கிங் மற்றும் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள், டோர்னியர் விமானம் ஆகியவை தயார் நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வங்கதேசத்தில் புயல் தாக்க வாய்ப்புள்ள இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கனோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments