கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் வழி மாறிய பயணிகள்.. 6 பேரை 5 மணி நேரத்திற்கு பின் மீட்பு

0 388

கொடைக்கானல் மோயர் சதுக்கம் சுற்றுலா தலத்தில் வழி தவறி சென்ற 4 பெண்கள் உள்ளிட்ட 6 சுற்றுலாப்பயணிகளை  5 மணி நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மயிலாடுதுறையை சேர்ந்த 9 பேர் சென்ற சுற்றுலா வேன் மோயர் சதுக்கம் சுற்றுலா தலத்தில் பிற்பகல் வேளையில் பழுதாகிய நிலையில், வேனை சரி செய்யும் வரை அருகில் இருந்த இடங்களை பார்வையிடலாம் எனச் சென்றவர்கள் வழிமாறியுள்ளனர்.

இதையடுத்து சுற்றுலா தல டிக்கட் கவுண்டரை தேடிக்கண்டுபிடித்து தஞ்சமடைந்தவர்களை, உடன் வந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் இரவு 11 மணிக்கு மேல் வனத்துறையினர் மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments