வயலில் வரப்பு வெட்டுவதில் தகராறு.. மகன்களோடு சேர்ந்து மண்வெட்டியால் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

0 387

செங்கல்பட்டு மாவட்டம் ஆக்கிணாம்பட்டில் வயலில் வரப்பு வெட்டும் தகராறில் தனது 2 மகன்களுடன் சேர்ந்து தம்பியை மண்வெட்டியால் அண்ணன் அடித்ததில் அவர் உயிரிழந்தார்.

கோதண்டனுக்கும் அவரது தம்பி ஹரிகிருஷ்ணனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் வயலில் வரப்பினை சீரமைக்கும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்த போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கோதண்டன் அவரது 2 மகன்களுடன் சேர்ந்து மண்வெட்டியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments