கேன்ஸ் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதை வென்ற இந்திய திரைப்படம்.. பாயல் கபாடியாவின் படத்திற்கு கிராண்ட் பிரி விருது

0 1848

பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் 'All We Imagine As Light' என்ற இந்திய திரைப்படம் கிராண்ட் பிரி விருதை தட்டிச் சென்றுள்ளது.

கேன்ஸ் விழாவின் மிகப்பெரிய விருதான பால்ம் டி'ஓர் விருதுக்கு போட்டியிட்ட 2வது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

செவிலியர் ஒருவர், பிரிந்து சென்ற தனது கணவரிடமிருந்து பெறும் பரிசுப் பொருள் ஒன்றினால் சந்திக்கும் பிரச்சனையைப் பற்றி பேசும் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டபோது, பார்வையாளர்கள் எழுந்து நின்று சுமார் 8 நிமிடங்களுக்கு கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments