சிவகாசி அருகே தனியார் உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் இறந்து கிடந்த புழு

0 385

சிவகாசி அருகே திருத்தங்கல் நகரில் தனியார் உணவகத்தில் பார்சல் வாங்கிய உணவை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, சாம்பார் பாக்கெட்டை பிரித்து தட்டில் ஊற்றியபோது, அதில் இறந்த நிலையில் புழு ஒன்று இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் சாப்பாடு தட்டுடன் உணவகத்திற்கு வந்து கேள்வி எழுப்பினார்.

இணையதளத்தில் வைரலாக பரவிய நிலையில் இதுகுறித்து உணவக உரிமையாளரிடம் கேட்டபோது காய்கறியில் இருந்த புழு கவனக்குறைவால் சாம்பாரில் வந்திருக்கலாம் எனவும், கவனமுடன் சமைக்குமாறு சமையலர்களை எச்சரித்துள்ளதாகவும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது எனவும் உணவக உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments