2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தாயும் தற்கொலை செய்த விவகாரம்... கணவர் கைது

0 576

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கணவரை போலீசார் கைது செய்தனர்.

புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோகுல் - சுகமதி தம்பதிக்கு, மகளிர் குழுவில் வாங்கிய கடனை கட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், சில தினங்களுக்கு முன்பு நடந்த சண்டையின்போது,  மனைவி சுகமதி கணவர் கோகுலை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கோகுல் தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், 10 நாட்களாக போனில் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் பேசாததால் மன உளைச்சலில் சுகமதி தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments