பயணிகளுடன் அரசு பேருந்தை வழிமறித்து ஆயுதங்களால் தாக்குதல்

0 482

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அழகர்கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த அரசு பேருந்தை அய்யர்பட்டி விலக்கு அருகே, முகமூடி அணிந்த நபர்கள், வழி மறித்து, அரிவாள் போன்ற ஆயுதம் கொண்டு தாக்கியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைத்து நொறுங்கின.

இதனால் பேருந்தின் ஓட்டுநர் நடத்துநர் மற்றும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.

தாக்குதலில் பேருந்தின் பயணிகள் இருக்கைகளும் சேதமடைந்தன.

இருக்கைகளுக்கு தீ வைத்துவிட்டு முபமூடி நபர்கள் தப்பியோடியதாக ஓட்டுநர் கூறினார்.

தீயை அணைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments