நாட்டுப்படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 5 மீனவர்களை படகுகளில் சென்று மீட்ட சக மீனவர்கள்

0 254

ராமேஸ்வரத்தில், தடையை மீறி மீன்பிடிக்கச் சென்று கடலில் மூழ்கிய நாட்டுப் படகில் இருந்த மீனவர்கள் 5 பேரை சக மீனவர்கள் மீட்டனர்.

புதிய புயல் சின்னம் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையையும் மீறி ஒரு படகில் சென்றவர்கள் சூறைக்காற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த படகின் உரிமையாளர் 3 படகுகளில் சென்று அவர்களை மீட்ட நிலையில், தடையை மீறியதாக படகு உரிமையாளர் மீது மீன்வளத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments