தென்காசி பழைய குற்றாலம் தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பழைய குற்றாலம் அருவியை தவிர மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்படுகிறது.
கடந்த 17ஆம் தேதி பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலை முதல் பழைய குற்றாலம் அருவியில் குளிக்கவும் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
Comments