நாலு ஆஸ்துமா நோயாளியை உள்ளே உட்கார வையிப்பா.. ஸ்கூல் பேருந்தா இது..! ஆய்வில் அதிரடி காட்டிய அதிகாரி

0 530

சென்னை பூந்தமல்லியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது தூசி அடைந்து காணப்பட்ட பள்ளி பேருந்தின் இருக்கைகளை சரி செய்து கொண்டு வருமாறு ஆர்.டி.ஓ திருப்பி அனுப்பினார். அதிரடி காட்டிய அதிகாரியால் ஆடிபோன பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஓ சரவணக்கண்ணன் ஆய்வு செய்தார்

குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோருடன் ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கி முழுமையான ஆய்வில் ஈடுபட்ட போது ஒரு பேருந்தின் இருக்கை தூசி படிந்து, அழுக்காக காட்சி அளித்தது. அதனை பார்த்ததும் வெளியே வந்த அவர் ஆஸ்துமா வரனுமுன்னா இந்த பேருந்தில் பயணித்தால் போதும் என்று எச்சரித்தார்

பள்ளி குழந்தைகள் பயணிக்கும் பேருந்து சீட்டை சுத்தம் செய்து எடுத்து வாருங்கள் என்று அந்த வாகனத்தை திருப்பி அனுப்பினார்

ஒரு பள்ளி வாகனத்தின் அவசர வழியில் ரப்பர் பீடிங் இல்லாமல் காலில் வெட்டும் வகையில் இருந்ததால் உடனடியாக அதனை சரி செய்ய சொன்ன ஆர்.டி.ஓ நம்ம வீட்டு பிள்ளைகள் இப்படி பட்ட வாகனத்தில் சென்றால் ஏற்றுக்கொள்வோமா ? என்று கேள்வி எழுப்பினார்

வாகனத்தில் நின்ற ஓட்டுனரிடம் சீறுடை குறித்து கேட்டதுடன், வண்டி நம்பரை சொல்லும் படி கேட்க அவர் தடுமாறினார்.

329 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த நிலையில் குறைகளை சரி செய்த வாகனங்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பேருந்தில் தீ பிடித்தால் எப்படி உடனடியாக செயல்பட்டு தீயணைக்க வேண்டும் என்று ஓட்டுனர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments