சிவகாசி வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்த வழக்கு... வங்கி மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளரை கைது செய்த போலீசார்

0 332

சிவகாசியில் உள்ள யூனியன் வங்கி கிளையில் போலி நகைகளை அடகு வைத்து ஏழரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் நடந்த தணிக்கையின்போது 56 பேரின் பெயர்களில் 126 தங்க நகை கடன் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரத்து 427 கிராம் நகைகள் போலியானவை என தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நகைமதிப்பீட்டாளர் முத்துமணி என்பவரின் உதவியுடன் நகைக்கடை உரிமையாளர் பாலசுந்தரம் என்பவர் போலி நகைகளை அடகு வைத்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடியில் மேலாளர் குமார் அமரேஷ், துணை  மேலாளர் அரவிந்த், உதவி மேலாளர் முகேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments