காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் பிரசாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ஜ.க.வுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பிரசாரங்களை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
காங்கிரசுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், இந்திய அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டுவிடும் என்பது போன்ற தவறான கருத்துக்களை பிரசாரத்தில் சொல்லக்கூடாது என்றும் அக்னி வீர் திட்டம் குறித்து பேசும்போது நாட்டின் பாதுகாப்பு படைகளை அரசியலாக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது
Comments