முருகனுக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

0 544

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் 1008 தங்க வில்வ இலை மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஆறுமுகசாமி கோயிலில் அரோகரா முழக்கமிட்டபடி பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

தேனி மாவட்டம் கண்டமனூர் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் அலகு குத்தி, காவடி சுமந்தும் பெண்கள் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 

இராமேஸ்வரம் மேலவாசல் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து முருகனுக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால், தயிர் மற்றும் நறுமண வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments