காவல் துறையில் எஸ்.ஐ. வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த எஸ்.எஸ்.ஐ. உள்பட 2 பேர் கைது

0 288

எஸ்.ஐ. வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முரளிதரன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், தப்பட்டைகிழவன்புதூரை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தனது உறவினர் மூலம் அறிமுகமான ஜெயராஜிடம் எஸ்ஐ வேலைக்காக இரண்டு தவணைகளாக 25 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.

அந்த பணத்தை ஜெயராஜ், அவரது நண்பர் கிருஷ்ணராஜ் மற்றும் முரளிதரன் ஆகியோருடன் பங்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முடிவில் தனது பெயர் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதாக பிரசாந்த் அளித்த புகாரையடுத்து, முரளிதரன் மற்றும் ஜெயராஜை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கிருஷ்ணராஜை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments