வைகாசி விசாகத்தையொட்டி கோயிலில்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டங்கள்... கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

0 250

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நேர்த்திகடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், காவடிகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுகவனேஸ்வரர் - சொர்ணாம்பிகை அம்மனை தரிசித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்ற கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரிக்குடியில் உள்ள லட்சுமி நரசிம்மர்கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று லட்சுமி நரசிம்மரை தரிசித்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் எம்எல்ஏ தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments