திருவொற்றியூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை
சென்னை, காலடிப்பேட்டையில் உள்ள கல்யாணவரதராஜ பெருமாள் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கருடசேவை உற்சவத்தின் போது உற்சவரை சுமந்து வந்த பல்லக்கின் ஒருபக்க தண்டு உடைந்ததால் பல்லக்கு ஒருபக்கமாக கீழே சாய்ந்தது.
முறையான பராமரிப்பு இல்லாமல் தண்டு உடைந்ததாக கூறப்படும் நிலையில், பல்லக்கில் நின்று கொண்டிருந்த பட்டாச்சாரியார் முரளி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கருட சேவை உற்சவம் பாதிக்காமல் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு கருட வாகனத்தில் அருள்பாலித்த பெருமாளை திரளான மக்கள் தரிசித்தனர். கந்தசாமி முருகன் கோயிலில் இருந்து வேறு தண்டு கொண்டுவரப்பட்டு பல்லக்கில் கட்டப்பட்ட பிறகு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து கருட சேவை உற்சவம் மீண்டும் தொடங்கியது.
Comments