இந்தியாவில் 324 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று..

0 472

இந்தியாவில் 324 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இன்சாகாக் என்ற கொரோனா திரிபு ஆய்வு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 26,000 பேருக்கு ஏற்பட்டுள்ள ஒமிக்ரான் ரக தொற்றுகளான KP-2 வகை 290 பேருக்கும் KP-1 34 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், மருத்துவமனையில் அனுமதியோ, தீவிர பாதிப்போ நோயாளிகளுக்கு ஏற்படாததால் அச்சமடையத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சார்ஸ் கோவிட் வைரசின் திரிபுகள் ஏற்பட்டு வருவதாகவும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இன்சாகாக் தெரிவித்துள்ளது.

KP-2 வகை தொற்று மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 148 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments