நடிகர் கார்த்திக் குமார் மீது காவல் ஆணையரிடம் புகார்..

0 418

நடிகர் கார்த்திக் குமார், பட்டியலின சமூகத்தை தரக்குறைவாக பேசியதாக கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் கவுதம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவரான கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக கார்த்திக்குமார் பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

அதில், அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தாக கூறப்பட்ட நிலையில் அதனை கார்த்திக்குமார் மறுத்ததோடு அந்த ஆடியோ தொடர்பாக அவரும் புகார் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments