முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்கு...

0 332

பண்ணை வீட்டிற்குள் அடியாட்களுடன் நுழைந்து காவலாளியை தாக்கி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக ஐஏஎஸ் அதிகாரி பீலாவெங்கடேசன் அளித்த புகாரில் அவரது கணவரும் காவல்துறை முன்னாள் டி.ஜி.பியுமான ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தையூர் பகுதியில் 2 ஏக்கர் நிலம் வாங்கி பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட பண்ணை வீட்டிற்காக இருவரது பெயரிலும் வங்கியில் கடன் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஷ்தாஸிற்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

இதனால், கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதால் பண்ணை வீட்டை பீலா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், அங்கு ராஜேஷ்தாஸ் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments