நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்... இதில் 73 வயது முதியவர் பலி - 30 பேர் காயம்

0 499

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் விமானம் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார்.

211 பயணிகளுடன் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777-300 இ-ஆர் ரக விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக பயங்கரமாக குலுங்கியது.

அடுத்த மூன்றே நிமிடங்களில் 31 ஆயிரம் அடி உயரத்திற்கு இறக்கப்பட்ட விமானம், அரை மணி நேரத்தில் பேங்காக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த அமளியில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்த சுமார் 30 பேர் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments