பல் மருத்துவ மாணவிகளின் விடுதிக்குள் புகுந்த புள்ளிங்கோ பதறிய மாணவிகள் நடந்தது என்ன..? 7 பேரை பரிதவிக்கவிட்ட சம்பவம்

0 864

சென்னை பல் மருத்துவ கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிக்குள் புகுந்த புள்ளிங்கோ திருடனால் மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். 7 மாணவிகளின் செல்போன் பறிபோன சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதியில் 150 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த புள்ளீங்கோ இளைஞர் ஒருவர், அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மாணவிகளின் அறைக்குள் புகுந்து ஸ்மார்ட் போன்களை திருடி உள்ளான்

ஒவ்வொரு அறையின் கதவுகளையும் தள்ளிப்பார்த்து உள்பக்கம் தாளிடப்படாத அறைக்குள் சென்று செல்போன்களை களவாடிச்சென்றுள்ளான். இதில் 7 மாணவிகளின் ஸ்மார்ட் போன்கள் பறிபோயிருப்பதால் சம்பந்தப்பட்ட மாணவிகள் பரிதவித்துப்போயுள்ளனர்

விடுதியின் காவலாளி மற்றும் வார்டன்கள் இரவு ரோந்து பணியில் இருக்கும் நிலையில் திருடன் உள்ளே நுழைந்தது எப்படி என்றும் ? மாணவிகளின் அறைக் கதவுக்கு உள்பக்க தாழ்பாள்கள் முறையாக உள்ளதா ? என்பது குறித்தும் சிசிடிவி காட்சிகளை கொண்டும் போலீசார் திருடனை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் மாணவிகளின் பெற்றோர், விடுதி நிர்வாகம் , தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments