பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் மருத்துவர்கள் 2 பேர் வீடுகளில் சோதனை
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் மருத்துவர்கள் 2 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரைச் சேர்ந்த ஜாஃபர் இக்பால், சாதிக் ஆகிய அந்த 2 மருத்துவர்களும், லஷ்கரே தொய்பா இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் 2012-இல் கைதானவர்கள் என்றும், 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின்னர் விடுதலையாகி கோவையில் குடியேறியதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையில் அவர்களிடம் இருந்து 2 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். லஷ்கரே ஆள் சேர்ப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முகமது சாஹித் ஃபைசல், பாகிஸ்தானில் இருந்தபடி வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டா மூலம் தகவல் அனுப்பி ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments